book

தலையணை மந்திரம்

Thalayanai manthiram

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.கே. முருகன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788189936310
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
Out of Stock
Add to Alert List

மந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத் திகழ்கிறது. அதுதான் தலையணை மந்திரம். தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே. ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே தருகிறது இந்த நூலின் தலைப்பு!

தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம் & அவர்களின் தனிமை நேரமே. அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அன்யோன்யமான உரையாடலே தலையணை மந்திரம். அந்த ஏகாந்த நேரத்தில் அன்யோன்யத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்; அன்யோன்யம் வளர வளர எப்படி தாம்பத்யத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்; தாம்பத்யத்தில் லேசாக விரிசல் நேரும்போதே அதை எப்படி நேராக்கிக் கொள்வது; தாம்பத்யத்துக்கான சோதனைக் களனான ஊடல் ஏற்படும் நேரங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்... ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது.

தாம்பத்யம் எனும்போது உள்ள உறவு மட்டும்தானா, உடல் உறவு இல்லாமலா? அது இல்லாமல் வாழ்க்கையில்லை, அதேசமயம் அது ஒன்றே வாழ்க்கையில்லையே! அதுவும் வாழ்க்கையில் ஓர் அங்கம், நிச்சயத் தேவை என்ற அணுகுமுறை இந்தப் புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

இந்தத் தலையணை மந்திரம் கணவனும் ஓதலாம். ம‌னைவி சொல்லே தலையணை மந்திரம் அல்ல! மந்திரத்தின் குறிக்கோள் உறுதியான தாம்பத்யம். தாம்பத்யம் என்பது கணவன்&மனைவி மட்டும் தங்கள் சுயநலத்தைப் பார்த்துக்கொண்டு போவதல்ல; பெண் தன் புகுந்தவீட்டையும், ஆண் தன் மாமனார் வீட்டையும் அனுசரித்துக் கொண்டு, தங்கள் இணையின் மனத்தை வசீகரித்து வைத்துக் கொள்ளும் நுண்ணிய கலையை அறிந்தவர்கள் மிகச் சொற்பமே. அந்தக் கலையை உளவியல் பாங்கோடு அணுகி இந்நூல் மூலம் தருகிறார் நூலாசிரியர்.