book

சர்வதேச விஞ்ஞானிகள்

Sarvadesa Vignanigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ.நா. அப்புசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :91
பதிப்பு :20
Published on :2007
ISBN :9788123425115
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

  உலகுக்கு இன்றியமையாத்து நீர், உடலுக்கு இன்றிமையாதவை ஊண், உடை, உறைவிடம், என்னும் மூன்று. உலகத்துக்கு இன்றியமையாதவை ஒழுக்கமும் அறிவும். அறிவின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது விஞ்ஞான அறிவு. விஞ்ஞான அறிவைப் படைத்துப் பேணி வளர்ப்பவர்கள் விஞ்ஞானிகள்.

 விஞ்ஞானிகள் பல காலங்களில் வாழ்ந்தவர்கள். பல நாடுகளைத் தம்முடைய சொந்த நாடாகப் பெற்றவர்கள். ஆனால், அவர்களுடைய அறிவுப் படைப்புகளும் அரும் பணிகளும், ஒரே காலத்தைச் சார்ந்தவை அல்ல; ஒரே நாட்டைச் சார்ந்தவையும் அல்ல. காலம் அனைத்தையும் அவை பாதிக்கின்றன. உலகம் அனைத்துக்கும் உரிமையாக உள்ளன.

 பல நாடுகளிலே பிறந்தும், பிற்பல காலங்களில் வாழ்ந்தும், தம் முன்னோர் பெற்றுத் தமக்கு அளித்த ஓரளவு மாற்றி ஒதுக்கியும்; அறிவு மாளிகையை, உப்பரிகையாக, வான்தோய்மடமாக, மேன்மேலும் எழுப்பிவரும் விஞ்ஞானிகள் மிகப் பலர். இந்த அற்புதக் கட்டுக்கோப்பை இயற்றுவதற்காக அவர்கள் புரிந்த பணிகள் பலவானவை. பலவகைப்பட்டவை. ஆயினும், அவை அனைத்தும் அவர்கள், தம் நலம் கருதாமல், உலகுக்கு அளித்த பேருதவி என்றோ, பெரும் பணி என்றோ, அரும் கடன் என்றோ, கருதத்தக்கவை.