book

ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு

Oru Mitha Minjiya Naatkurippu

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலநாபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :2
Published on :1999
ISBN :9788123403960
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

ஒரு மிதமிஞ்சிய நாட்குறிப்பு என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் தமிழ் எழுத்துலகின் மேதை ஜெயகாந்தன். எழுத்தாளரின் படைப்பாற்றலை எடைதூக்கிச் சொல்பவர்கள் வாசகர்கள். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் கமலநாபனை எடைதூக்கி வாசகர்களுக்கு அடையாளம் காட்டுகின்ற ஜெயகாந்தன், '' கமலநாபனின் வாழ்க்கைபற்றிய பார்வை ஒதுங்கியிருந்து பார்ப்பதாக இல்லை. உடனிருந்து பார்க்கின்ற பார்வை'' எனவும் '' கமலநாபனுக்குத் தனது கதாபாத்திரங்களின் மீதுள்ள அன்பு அவரது கதைகளில் தெரிகிறது'' எனவும் எழுதுகிறார்.

 கலங்கரை விளக்கத்திற்கு வெண்மை ஒளி விளக்குப் பொருத்துவதால்தான் கடலில் வெகு தூரத்தில் வருகின்ற கப்பல்களுக்கும் கரையை அடையாளம் காட்டமுடிகிறது. வேறு நிறங்களில் ஒளிவிளக்குகள் பொருத்தினால் தூரத்தில் வருகின்ற கப்பலின் மாலுமியின் கண்களில் படாது. அதைப்போல் ஜெயகாந்தன் என்ற ஒளி கமலநாபனை வாசகர்களுக்கு அடையாளம் காட்டிப் பெருமை சேர்க்கிறது. ஏற்கனெவே பத்திரிகை உலகு வாயிலாக எழுத்தாளர் கமலநாபன் அறிமுகமானவர் என்பதும் பெருமைக்குரியது. அவரது கைவண்ணம் இந்நூலில் இடம்பெறும் பதினைந்து கதைகளிலும் பளிச்சிடுகிறது.