book

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும்

ulaga Mayamaakalum India Vivasaiyegalum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர். ரகுநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123408781
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்
Out of Stock
Add to Alert List

 விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகம் பல்வேறு துறைகளையும் தொட்ட வண்ணம் உள்ளது. இப்பேருலகை ஒரு கைக்குள் அடக்கிவிடும் நிலையை நோக்கி, அது தன் பயணத்தைத் தொடர்கின்றது. நிலைமை இவ்வாறு ஒருபுறமிருக்க, தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்பவை மனித குலத்தைக் கூறுகளாக்கி, அவர்களிடையே மென்மேலும் நெருக்கடியைத் திணித்து, வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது! இதுதான் நிலைமையின் மறுபக்கமாக உள்ளது.

 இந்தியச் சந்தையில் நாம் என்ன வாங்க வேண்டும் என்பதை எங்கோ இருக்கிற சில மாபெரும் கனவான்கள் தீர்மானிக்கிறார்கள். இதுதான் உலகமயம் காட்டுகிற வழித்தடம், இந்தத் தடம் போடப்பட்டதன் விளைவாக, நாம் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருள்களும் உல மயத்தால் சிக்குண்டு, நம்மை விட்டு எட்டி நின்று, நம்மை ஏங்க வைக்கின்றன.