book

பலன் தரும் விரதங்கள்

Palan tharum virathangal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபுசங்கர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189936273
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம்,
Out of Stock
Add to Alert List

இறைவழிபாட்டின் ஒரு அம்சமாக இருப்பவை விரதங்கள். இவை எல்லா மதங்களிலும் உண்டு. விரதங்களின் மூலம் உடலுக்கும் உள்ளத்துக்குமான ஆரோக்கியத்தை முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி வகுத்து வைக்கப்பட்ட நியமங்களின்படி விரதம் இருப்போரின் அனுபவங்கள், அதை நமக்கு எடுத்துச் சொல்லும்.

நாம் கொண்டாடும் சில பண்டிகைகளே, விரதங்களாகவும் இருப்பதுண்டு. இது கூடுதலான இறை வழிபாட்டு முயற்சிகளே. இப்படி இறை வழிபாட்டுக்குப் பல வழிகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கியக் காரணம், நாம் இருக்கும் நிலைக்குக் காரணமான இறைவனுக்கு, நாம் இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நன்றி சொல்வதற்காகத்தான். அதையும் ஒரு முறையாகச் செய்தால், வழிபாட்டில் முழு ஈடுபாடு இருக்குமல்லவா?

இதையே இந்தப் புத்தகம் சொல்கிறது. தற்காலத்திய இளைஞர்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஈடுபாடு என்பது நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களாகவே விரும்பி இதுபோன்ற விரதங்களிலும், வழிபாட்டிலும் கலந்துகொள்ள முன்வராததற்கு, அவர்களுடைய சில கேள்விகளுக்கு விடை கிடைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். கிழமைகள், திதிகள், மாதங்கள் உள்ளிட்ட சிலவற்றை வைத்தே விரதங்கள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த விரதங்களின் தன்மைகள் என்ன? அவற்றால் ஏற்படும் பலன்கள் என்ன? அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்களை எளிய வகையில் தருகிறது இந்நூல்.

வளரும் தலைமுறையினர் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்திருக்கும் இந்நூல், அவர்களுடைய அடிமனத்தில் எழும் சந்தேகங்களைப் போக்கும்.