book

ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 1

Aanmika sindhanaikal

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

"இது இன்று, நேற்று வந்த உறவல்ல பால்குமார். இது ஜென்ம ஜென்மாந்திர தொடர்புடையது. பல்வேறு பிறவிகள் தாண்டி நாம் இணைந்து நகர்ந்து நகர்ந்து வந்திருக்கிறோம்.
பால்குமார், If at all there is any rebirth this Begger is like to be with Balakumaran. இனி மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்த பிச்சைக்காரன் பாலகுமாரனோடு இருக்க ஆசைப்படுகிறான்" என்ன அற்புதமான தெய்வ வாக்கு இது.
வெறுமே சொல் விளையாடல் செய்பவரா என் குருநாதர். இல்லவே இல்லை. அவரின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு அசைவும் அர்த்தம் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்.
அவருக்கு மறுபிறவி உண்டா. எல்லாம் அறிந்த ஞானி மறுபடியும் மனிதராக பிறப்பாரா. இல்லை. எனக்கு மறுபிறவி உண்டு. அந்த மறுபிறவியில் இளம் வயதிலேயே குருவினுடைய தீட்சண்யம் எனக்குள் ஏற்பட்டுவிடும்.
என்னை தெரிந்தவனாக நான் பிறக்க நேரிடும். நல்ல மனிதனாக மலர நேரிடும் என்பதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். நான் அடுத்த பிறவிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். எனவே, எனக்கு மரணம் பற்றி எந்த பயமும் இல்லை.
இதோடு முடிந்து போயிற்றா இல்லை. "பால்குமார், யூ ஆர் மை பென்" என்றும் சொல்லியிருக்கிறார். அன்று முதல் இன்று வரை நான் எழுதுவதெல்லாம் அவர் எழுதுவதாகவே கருதுகிறேன். அவர் சொல்லாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது.
என்னால் சத்தியத்தை தவிர வேறு எதுவும் எழுத முடிவதில்லை. எழுதுவது என்பது எனக்கு இறைபணி. எழுதுவது என்பது இறைவன் ஆணையிட்டது. எழுதுவது என்பது வேறு எங்கிருந்தோ வந்து என்னுள் புகுந்து கொண்டிருக்கிறது.
நான் கருவி. என் எழுத்து சத்தியம். நான் மனிதன். என் எழுத்து தேவகுரல். நான் சாதாரணன். என் எழுத்து அசாதாரணமானது. ஏனெனில் அதில் உண்மை மிளிர்கிறது. அது குருவினுடைய ஆசிர்வாதத்தால் வெளிவருகிறது.

ஒரு நல்ல குரு கிடைத்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எந்தவித வேதனையும் இருக்காது. மாறாக மிகப் பெரிய மேன்மைகள் வந்து நிற்கும்.