book

உங்களைத் தெரியுமா உங்களுக்கு?

Ungalai theriyuma Ungalukku?

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

'' இந்த உலகம் ஒரு பெரிய விளையாட்டுப் பயிற்சிக் கூடம், நம்மை நாமே பலமுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்'' என்று விவேகானந்தர் கூறுவார். உடல் பலம் ஓர் அம்சம் என்றால் மனவலிமை இன்னொரு அம்சமாகும்.

உடல் வலிமை உள்ளவனுக்கு மனவலிமையும் தேவை. வலுவான உடலும் உள்ளமும் கொண்ட மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்கள் என்று சொல்லும்போது, அவர்களுடைய குணநலன்கள் குறித்து நாம் யோணிக்க வேண்டும்.

தூய்மையானவனாய், விடாமுயற்சி கொண்டவனாய், பொறுமைமிக்கவனாய், தையமானவனாய், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவனாய், யாரையும் பழித்துப் பேசாதவனாய், ஒழுக்கமானவனாய், சுயநலம் இல்லாதவனாய், உயிர்களிடத்தில் அன்புகொண்டவனாய், உண்மையானவனாய், நேர்மையானவனாய், பிறர்நேயம் கொண்டவனாய், தொண்டுள்ளம் மிக்கவனாய் பல்வேறு நற்குணங்களை கொண்டிருக்க வேண்டும்.