book

ஞான மொழிகள்

GnyanaMozhigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரோஸ்லின் சுரேஷ்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798188049973
Out of Stock
Add to Alert List

இது ஒரு புதிய ஹைகூ கவிதைத் தொகுப்பு ' ஞான மொழிகள்' எனும் தலைப்பில் புதுமொழி பேசுகிறது. இது ஒரு பக்கம் தத்தஉவமாகப் பட்டாலும். மற்றொரு புறம் விடுகதையாய்ப் படுகிறது. ஆக ஓரிரு வரிகளில் சொல்லப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்றவைகள் எல்லாமே 'ஹைகூ' எனச் சொல்வது இன்றைய காலத்தின் நவீனம் அல்லது நியதி.

 வாழ்வின் அடித்தளத்தில் படிந்திருக்கும் சில உண்மைகளை கலக்காமல் வடித்தொடுத்தால் அது கவிதை. சில கலங்கிய குட்டைப் போல தோற்றமளிக்கும். சில தெளிந்த நீரோடைப் போல தோற்றமளிக்கும். எதுவாக இருப்பினும் கவிதையின் பரிணாமத்தில் அததன் சித்தாந்தம் என்பது மாற்றுரு கொண்டு சிருட்டியின் மனப்போக்கில் நிமிர்ந்து நிற்கிறது.

 கவிதை, கருத்தெனும் கருவறையில் கருவாகுகையில் ஏற்படும் பரவசமானது படிப்பவர் நெஞ்சுக்குப் பந்தி வைக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 இந்நூலில் சொல்லப்படும் கவிதைகளும் அப்படித்தான்.