book

நம்ப முடியாத நல்ல கதைகள்

NambaMudiyatha NallaKathaigal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலவேலன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :84
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788188049455
Add to Cart

குடும்பம், சமூகம், நிறுவனம், அரசாங்கம், பத்திரிகை, சினிமா, அரசியல் ஆகியவற்றின் நடப்பு சீர்கேடில்லாதாக இருந்தால் நாட்டில் ஒழுக்கச் சிதைவுகள் இல்லாத உன்னத நிலைமை நிலவும். பிற நாடுகளுக்கு நம் நாடு வழிகாட்டியாக அமையும். உலகத்துக்கு வழிகாட்டிடத் தமிழர் ஒவ்வொருவரும் தாயாராகவேண்டும். இந்நூல் ஒவ்வொரு துறையின் அவலங்களையும் சொல்லி உணர்ந்திடவும் திருந்திடவும் உயர்ந்திடவும் வழிகாட்டும் கலவை.

ஓடிக் குதித்துச் சிறுவர்கள் விளையாடும் இடங்களில் '' விழுந்திடாதே... விழுந்திடாதே'' என்று பெரியவர்களின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஓடு ஆடிய பருவத்தில் பட்ட காயங்களின் பதிவுகள் உடலிலும் உள்ளத்திலும் இருக்கலாம். 'விழுந்திடாதே' என்ற சொல்லின் அதிர்வலைகள்கூட விழுந்துவிடாமல் காத்துக் கொண்டிருக்கும்.

வாழ்நாளின் முற்பகுதியில் எனது அணுகுமுறைகள் அழுக்காக இருந்தால் விழுந்து விழுந்து பல காயங்களுக்கு ஆளானவன் நான். அதனால் முதுமையில் எனது உள்ளத்தின் தோலை உரித்து அந்த வடுக்களை உங்களிடம் காட்டி, நீங்கள் முகம் சுளிப்பதை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் உங்கள் மனம் தெளிவடைவதை எதிர்நோக்குகிறேன். சிற்றின்பம் என்று சொல்லப்படும் பாலுறவு நிர்வாகம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காகப் பல மருத்துவ நூல்களும், காமசுத்திர நூல்களும் உள்ளன. பேரின்பம் என்று கருதப்படும் வாழ்வியல் அணுகுமுறைகள் சிறப்பாக அமைய இதுபோன்ற நூல்கள் தேவைதான் என்பது கருத்து.