book

உனக்கு நிகர் நீயே

Unakku Nigar Neeyae

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் ஏ.எஸ். சந்துரு
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :110
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788188049257
Add to Cart

பலவீனமான மனப்போக்கு ஜோதிடர்களிடமும் போலிச் சாமியார்களிடமும் மனிதனை இழுத்துச் செல்கிறது. உழைப்பு, நம்பிக்கை, திறமை ஆகியவற்றை உணர்ந்தவர்கள் தன்னை நம்பியே வாழ்வார்கள். உயர்வான வாழ்வை எட்டிப் பிடிப்பார்கள். சந்தேகக் கோணத்தில் எதைப் பார்த்தாலும் தவறுகள் கணிசமாக இருக்கத்தான் செய்யும். ஒரு செயலைச் செய்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற கட்டாய சூழ்நிலை வரும்போது மனிதனின் திறமை, வீரம், நம்பிக்கை, புத்திசாலித்தனம், விவேகம் அனைத்தும் திறம்படச் செயல்படுகிறது. சில நேரங்களில் பிறர் இழிவு செய்யும்போது நல்ல திட்டங்கள் அவனை ஈர்த்துக்கொண்டு வளமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.

 மேற்கண்ட கருத்துக்களைப் பல கதைகள் மூலமும் வரலாற்றுச் சான்றுகள் மூலமும் நூலாசிரியர் சந்துரு அவர்கள் விளக்கி இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இந்நூலைப் படிப்பவர்கள் மனச்சோர்வு, உடல் சோர்விலிருந்து விடுபட்டுச் சாதனை நாயகர்களாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.