book

பாலைப் புறா

Paalai Pura

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :381
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048861
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

சமகால நடப்புக்களைக் கலைக் கண்ணோடு மட்டும் பார்க்காமல் தேவைபட்ட இடங்களில், நேரங்களில் கவலையோடும். தீர்வு கிடைக்குமா என் தேடலோடும் பார்க்கிற எந்த எழுத்தாளனுக்கும், 'எயிட்ஸ்' ஒரு கதைப் பொருளாகலாம். ஆனால், மனதகுலத்துக்கெதிரான அந்தப் பேராபத்து குறித்துச் சிந்திக்கிறபோது, ஏதோ பாலியல் வக்கிரங்களின் வெளிப்பாடு என்ற கிட்டப் பார்வையில்லாமல், அது ஒரு பெரிய சமூகச் சிக்கலின் வெடிப்பு என்று கருதுவதிலேயும், அதன் சகல அயுதங்களையும் செயலிழக்கச் செய்வதிலேயும், சு. சமுத்திரம், தனித்து ஜொலிக்கிறார்.

 

போதை மருந்துகளின் பேயாட்டம் - அதை மறைந்திருந்து பொம்மலாட்டமாய் இருக்கும் சமூக விரோத சக்திகள் ஒரு புறம்.

கந்தல், குடிசை, கூழ், கூடப் பிறந்த வியாதி இவற்றைத் தந்ததோடு உழைப்புக்கும் 'பெப்பே' காட்டும் வறுமை மறுபுறம்.

ஆணாதிக்கப் போக்கின் அவலம் மூன்றாவது பரிமாணத்தில்.

 

இந்த பின்னணியில், பதுங்கிப் பாயும் ஆட்கொல்லியின் பிடர்பிடிக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்.

இங்கே கிராமம், நகரம் என்ற பூகோள வரையறைகள் பொதுங்கிப் போகின்றன. மெத்தப் படித்தவர்களின் சாதுர்யமும், சாமானியர்களின் பிள்ளை மனமும், துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.