book

சிலப்பதிகாரத் தமிழகம்

Silapathigara Tamilagam

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :268
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048823
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம் , படைப்புக்கலை, பெண்ணுரிமை
Out of Stock
Add to Alert List

கம்பன் தான் கனவு தமிழகத்தைக் கோசல நாட்டில் கண்டான் என்று சமதர்ம சிற்பி ஜீவா சொல்வதைப் போல் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் சிலப்பதிகாரத் தமிழகத்தை நமது மணக்கண் முன் படைத்துக் காட்டுகிறார். அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றாக வந்து கொல்லும், ஊழ்வினை தொடர்ந்து வந்து தண்டிக்கும், கற்பு நெறி காக்கும் பெண்களை உயர்ந்தோர் போற்றுவர் என்ற மூன்று அறங்களைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகிறது. கண்ணகி தனது காற்சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்களைச் சிதறச் செய்து தனது கணவன் கள்வன் அல்லன் என்று மன்னனை உணரச் செய்கிறாள். நல்லவர்களை எரிக்காதே என்று நெருப்பு நீதி சொல்கிறாள். சோழ, சேர, பாண்டிய நாடுகளை இணைத்து அறம் கூறும் சிலப்பதிகாரம் தமிழகத்தின் பெருமை கூறும்.