book

இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும்

Internet Explorarum Netscape Navigatorum

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. புவனேஸ்வரி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

முன்னர் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் என்று அறியப்பட்ட விண்டோஸ் இண்டர்நெட் எக்சுபுளோரர் மைக்ரோசாப்டினால் விருத்திசெய்யப்பட்ட வரைகலை உலாவியாகும். இது 1995 இல் இருந்து இயங்குதளத்தின் ஓர் அங்கமாக வெளிவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகமாகப் பாவிக்கப்பட்ட ஓர் உலாவியாகியது. 2002-2003 ஆம் ஆண்டளவில் உலாவியின் பங்கில் 95% இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6ஆவது பதிப்புக்கள் மூலம் இது வைத்திருந்தபோதும் இதன் பாவனையாள பங்கானது படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இண்டநெட் எக்ஸ்புளோரர் 1994 ஆம் ஆண்டு கோடை காலத்தில் தாமஸ் றியடொன் (Thomas Reardon) ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் பெஞ்சமின் ஸ்லிவ்காவினால் ஸ்பைகிளால் மூலநிரலில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் காலாண்டுக் கட்டணத்துடன் விண்டோஸ் அல்லாத மென்பொருட்களின் வருமானத்தின் ஒருபகுதியையும் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் வழங்கியது. ஸ்பைகிளாஸ் மொசாக் அமெரிக்காவின் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் (NCSA) மொசாக் உலாவியுடன் பெயரளவில் ஒற்றுமை இருந்தாலும் அருமையாகவே ஸ்பைகிளாஸ் மொசாக் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் மொசாக் உலாவியின் மூலநிரலைப் பாவித்தது.