-
நூலாசிரியர் பிரபல சோவியத் மனோ தத்துவ நிபுணர், மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசில் உள்ள யா. எஸ். கோகேபஷ்வீலி பெயர் தாங்கிய ஆசிரியரில் விஞ்ஞான ஆராய்ச்சிக் கல்லூரியின் இயக்குநர்; பல ஆண்டுகளாக செகன்டரி பள்ளியின் மேலாளராக பணியாற்றினார. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதன் மீது இவர் விசேஷ கவனம் செலுத்தினார். இந்த வயதுப் பிரிவினருக்கு கல்வி கற்பிப்பதன் சிறப்பியல்புகள் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன, இவர்களின் வளர்ப்பு முறைகள் உருவாக்கப்பட்டு எளிய நடையில் தரப்பட்டுள்ளன.
ஆறு வயதுக் குழ்ந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி கற்பிப்பதில் அமனஷ்வீலியின் தலைமையின் கீழ் அடையப்பட்ட அனுபவம் சோவியத் நாட்டில் பள்ளி சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் போது பயன்படுத்தப்பட்டது.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனநிலை எப்படி உருவாகிறது? இந்த வயதில் தவறாக வளர்த்தால் இது பின்னால் எப்படிப்பட்ட பாதிப்புகளை எற்படுத்தும்? ஆறு வயதுக் குழந்தைகளுடன் பரஸ்பர மன ஒற்றுமை நிலவும் வகையில் பாடங்களை எப்படி நடத்துவது? இக்கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் அசிரியர் பதில்களைத் தருகிறார். சொந்த அனுபவத்திலிருந்து இவற்றிற்கு உதாரணங்களைத் தருகிறார்.
உயிரோட்டமுள்ள, அழகிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறு வயதுக் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்பில் அக்கறையுள்ளவர்கள் ஆகியோருக்குப் பயன்படும்.
-
This book Kulanthaikalin Ethirkaalam is written by and published by Arivu pathippagam.
இந்த நூல் குழந்தைகளின் எதிர்காலம், ஷ. அமனஷ்வீலி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kulanthaikalin Ethirkaalam, குழந்தைகளின் எதிர்காலம், ஷ. அமனஷ்வீலி, , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,ஷ. அமனஷ்வீலி மாணவருக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Kulanthaikalin Ethirkaalam tamil book.
|