book

பூங்குயில் சிறுவர் பாடல்கள்

Poonguyil Siruvar Paadalgal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசுகி ஜெயரத்னம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :69
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798188048853
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு,
Add to Cart

ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா... ஓ... வளையாதா... ஆனால் பூங்குயிலைப் படித்துவிட்டால் ஐந்துக்கு விதைத்தது ஐம்பது வரை இல்லை. இல்லை... என்றென்றும் வளரும் விளையும். முனைவர் வாசுகி ஜெயரத்னம் நான்றிந்த கவிஞரிலே நலம் பரப்பும் ஒரு மாணிக்கம். அன்னை தெரசாவின் அருள் மடியில் பணிபுரியும் பேராசிரிய மாணிக்கம் விதைத்து. (குழந்தையே) கூவுகிறது (எழுகிறது) கேளுங்களேன் (படியுங்களேன்)..........

வாசுகி அன்னையே பூமியடியில் விதை நட்டால் அது புதைந்தா போய்விடும் என்கிறாய். புதைந்துதான் போய்விடும்... நீ விதைத்துள்ள விதை என்னுள் புதைந்து, ஊறி, செடியாகி, மரமாகிக் காயாகிப் பழமாவதை நீயும் பார்க்கத்தான் போகிறாய். உன் அமுதத்தமிழை நான் பருகி நல்லன எல்லாம் நாடி முடிப்போன். பூங்குயிலாய்ப் பறந்து வண்ணமயமான பூச்செண்டாவேன். அம்மாவின் அசியுடன் அன்னப்பறவையாகி நல்லன நாடி தீயதை ஓட்டுவேன். வசந்தத்தை வரவழைக்கும் சிட்டாவேன். மல்லிகையாய் மண்பேன். மழலையாய்ப் பொழிந்து மனிதநேயம் வளர வாழையாய் வாழ்வேன். காக்கைபோல் பகிர்ந்துண்பேன். நிலவுக்குப் போவேன். பசுமைப் புரட்சியும் செய்வேன். பல்தொழில் கற்பேன். மலைக்கோட்டை கண்டுமகிழ்வேன். வெட்டிப் பேச்சு பேசேன். சட்டம் பயில்வேன். சமத்துவம் பழவேன். மயிலாய் நடந்து தேசியமானேன். அணில் குட்டியின் ஆராதிக்கிறேன். சிறகை விரித்துச் சிட்டுக்குருவியாய்ப் பறக்கிறேன். கடற்கரையில் நடக்கவிட்டாய் கடலுக்குள்ளும் அதிசயங்களைக் காணவிட்டாய். தேனீயாய்ச் சுற்றுகிறேன். யாதும் ஊராகிறுது, யாவரும் கேளிராயினர் சில்லாட்டம் ஆடுகிறேன். பாண்டியாட்டம் ஆடுகிறேன். பம்பரம் சுழற்றுகிறேன். பம்பரமாகவும், சைக்களிள் ஓட்டுகிறேன், சாலை விதிகளை அறிகிறேன்.பேருந்தில் பயணம் செய்து பயண விதிகளை அறிகிறேன். பாரதியை நான்றிவேன். காந்தித்தாத்தா யாரென்று கேட்டேன்.