book

சுனை நீர்

Sunai Neer

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராகவன் ஸாம்யேல்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :146
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

தன்னுடைய முழு வாழ்வையும், மொத்த மனிதர்களையும் மிகுந்த நுட்பத்துடனும் பரிவுடனும் திரும்பிப் பார்த்து, ஒரு இடைவெளியற்ற, பிரும்மாண்ட, தொடர் ஓவியம் போல வரைந்துகொண்டே போவதும் ஒரு அபூர்வமான படைப்பு மன நிலை சார்ந்தது. படைப்பு மன நிலை என்ன படைப்பு மன நிலை? அது என்ன வானத்திலிருந்தா குதிக்கிறது? அபூர்வமான, ராகவன் என்பவரின் இதற்கு முந்திய, உயிர்ப்பு நிரம்பிய வாழ்வையும் மனிதரையும் சார்ந்தது அது.

நுட்பமும் செய்நேர்த்தியும் கூடியதாக எத்தனையோ கதைகள். எதற்கும் மெனக்கிடவில்லை. இழைக்கவில்லை. செதுக்க வில்லை. அதனதன் வார்ப்பில் அவை கச்சிதமாக அப்படியப்படி அமைந்துவிட்டதாகவே தெரிகிறது. இத்தனை நேர்த்தியைப் படைப்புக்களில், அதுவும் இப்படி ஒரு நேர்கோட்டில், கொண்டு வருவது எளிதானது அல்ல. ராகவனுக்கு அது சித்தித்திருக்கிறது. அதனாலேயே, அவருக்கு எந்தக் கட்டியங்களும், முன் ஆரவாரங்களும் இன்றி தன் முதல் அசலான படைப்புக்கள் எப்போதுமே இப்படித்தான் அமைதியாக நம் முன்பு வந்து, அதைவிடவும் உறுதியான அமைதியுடன் மேலும் முன்னகர்ந்து நம்மைத் தாண்டிச் செல்லும். என்னைத் தாண்டிச் செல்லும் ராகவனின் எழுத்துக்களை எனக்குப் பிடித்திருக்கிறது.