book

சன்மார்க்க வினாடி வினா

Sanmaarka Vinaadi Vinaa

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசுகி பண்டுரங்கன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048649
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Add to Cart

கோவில்களில் பல சிலைகளுக்கு உயிர் கொடுத்த மன்னன் போர்க்களத்தில் பல வீர்ர்களின் உயிரை எடுக்கிறான். அவன் வீராதிவீரன், பக்திமான் என்று போற்றப்படுகிறான். அதைப்போல் கோவில்களில் சிலைகளைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, விதவிதமான கறி உணவுகளை உண்டு உடல் வளர்ப்பவர்கள் பக்திப் பழங்களாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் வள்ளலார் உயிரினங்களை வதைத்து உண்ணக்கூடாது என்பதை ஜீவகாருண்யம் என்ற உயிர்க்கொள்கையில் அடக்கி, புது வழிகாட்டினார். அவர் வேறுபடுத்தும் மதவெறி காட்டவில்லை. பக்குவப்படுத்தும் சமயநெறி காட்டினார்.

 கோவில் யானை மதம் பிடித்து ஓடவில்லை. மதம் பிடிக்காமல்தான் (விரும்பாமல்) ஓடுகிறது என்று ஒரு கவிஞர் புனைந்து காட்டினார். அகத்தே கறுத்து வாழாமல். உள்ளொன்று வைத்துப் புறமென்று பேசாமல், கண்மூடிப் பழக்க வழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும் என்ற கருத்தை வள்ளலார் விதைத்தார்.

 எவ்வளவுதான் பற்றற்றவர்களாக இருந்தாலும் மானம் மறைக்காமல் நிர்வாண நிலையில் இருக்க இயலாது. அதையும் மீறி முற்றும் துறந்த நிர்வாணத் துறவி ஒருவர் ' உத்தம மனிதர்' என்று வள்ளலாரை அடையாளம் காட்டினார்.