book

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

Pyramidugal Desathil Gnyana Thedal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். கணேசன்
பதிப்பகம் :Blackhole Publication
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :3
Published on :2014
ISBN :9789381098127
Out of Stock
Add to Alert List

பண்டைய எகிப்தின் மெய்ஞான உண்மைகளையும்,  பரம ரகசியங்களையும் இந்த நூல் எளிமையாகவும் சுருக்கமாகவும் சுவைபடவும் விளக்குகிறது.

எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம். மிகப் பழைமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மிகத் தேடல்களிலும் பண்டைக் காலம் முதலே சிறந்து விளங்கியது. இன்றும் எகிப்தின் ஸ்பிங்க்ஸ்”ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மிக ரகசியங்களைத் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்தச் செல்வங்களைச் சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மிக ரகசியங்கள் பிரமிடுகளில் இன்னும் ஏராளமாக உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து.
 
இந்நூலில் வரும் சம்பவங்களும், அனுபவங்களும் எழுத்தாளர் பால் ப்ரண்டனுடையதே என்றாலும், இது மொழி பெயர்ப்பு நூல் அல்ல. அவரது பயண அனுபவங்களில் சுவாரசியமானவற்றையும், தேவையானவற்றையும் மட்டு@ம எடுத்துக்கொண்டுள்@ளன். அதே போல சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் விளக்காமல் விட்ட சிலவற்றைத் தேவை கருதி நான் விளக்கியும் விவரித்தும் இருக்கிறேன்.