book

காஞ்சிக்கதிரவன்

Kachikathiravan

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

தமிழ் எழுத்துலகில் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் தன் படைப்புத்திறனை வெளிப்படுத்திய முனைவர் கோவி.மணிசேகரன் சின்னத்திரை மற்றும் பெரியதிரையிலும் தன் காலடியை பதித்துள்ளார். இவர் எழுதிய குற்றாலக்குறவஞ்சி நாவலுக்கு சாகத்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது. தமிழின் பெருமையை உலக வரலாற்றில் பேச வைக்கும் வரிசையில் இப்போது வெளிவந்திருக்கும் நூல் ‘காஞ்சிக் கதிரவன்’. 32 அத்தியாயங்களாக எளிய நடைமுறையில் பிரித்து எழுதி இருக்கிறார்.

இந்த நாவல் படிக்க, படிக்க ஒரு உற்சாகத்தை வரவழைக்கிறது. மகேந்திர பல்லவன்தான் கதாநாயகன், அவனே காஞ்சிக்கதிரவன். அஜந்தா என்பவள் கோவியாரின் கற்பனை பாத்திரம், காவிய பேரழகி. மாவீர மகேந்திரனும், பேரழகி அஜந்தாவும் கொண்ட காதல், கதைப்பின்னல், பழமுதிர்ச்சோலை மலையில் இறங்கி வரும் சிலம்பாறு போன்ற நடை இவை அனைத்தும் படிப்பவர்களை கரும்பின் சுவைக்கு கொண்டு செல்கிறது. எப்போது படித்தாலும் காலத்தை வெல்லும் இந்த காதல் சாம்ராஜ்யம் மனதில் நிலைத்து நிற்கும்.