book

ராஜ கர்ஜனை

Raja Karjanai

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

திப்புசுல்தானை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் சரித்திரநாவல் வரவில்லையே என்ற குறையை “ராஜ கர்ஜனை’’ புத்தகம் போக்குகிறது. இதன் ஆசிரியர் ‘‘இலக்கிய சாம்ராட்’’ கோவி.மணிசேகரன், கல்கி பத்திரிகையில் இந்த நாவலை 1978–79ம் ஆண்டுகளில் தொடர்கதையாக எழுதி உள்ளார். ஹைதர் அலி, திப்புசுல்தான், பசவராஜ், ரங்கநாயகி ஆகிய நான்கு கதாபாத்திரங்களையும் வாசகர்கள் உள்ளத்தை கவரும் வண்ணம் உருவாக்கியுள்ளார்.

திப்புசுல்தானுக்கும், பசவராஜ¨க்கும் இடையே நடந்த வாள் சண்டையை தத்துரூபமாக வர்ணித்துள்ளார். ‘‘யுத்தத்தில் கொல்பவனோ, கொல்லப்படுபவனோ, பாவிகளாவதில்லை, அது இறைவன் சித்தம்! ஆத்மாவுக்கு நட்பேது? பாசமேது? உறவேது?’’ என்ற கீதை வரிகளை சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பாகும். வீரத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும்.