book

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு

Thaambathyam Inaippu Pinaippu

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :315
பதிப்பு :2
Published on :2009
ISBN :9789382577508
Add to Cart

நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ என்ற கட்டுரைக்கு டாக்டரேட்டும் பெற்றவர். ‘மனோதத்துவ சிகிச்சை’ பாடத்தில் டிப்ளமோ(1963) பெற்றவர். 1970&ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் வேலூரிலுள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் அண்டு ஹாஸ்பிடலில் சைக்காலஜிஸ்டாகப் பணியாற்றியவர். உலகக் கலைக் களஞ்சியம் புத்தகத் தொகுப்பில் மனோதத்துவப் பிரிவின் ஆசிரியராக ஐந்து வருடம் பணிபுரிந்தவர். 1975 முதல் திருவனந்தபுரம் மனோவியல் சிகிச்சை மையமான இன்ஸ்டியூட் ஆஃப் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்து ஆயிரக்கணக்கான தம்பதியரின் மன, பாலியல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்; வைத்துக்கொண்டிருக்கிறார். மன சாஸ்திரம், குடும்ப வாழ்க்கை பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இது தவிர மலையாளத்தில் வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் மனோவியல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய நூல்கள் 15. புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர், நாடக நடிகர், சிற்பி, கார்ட்டூனிஸ்ட் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.தம்பதிகளுக்கான நடைமுறை கேஸ் வரலாறுகள் அடங்கிய மிகச் சிறந்ததொரு நூலே தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு.அன்பை உடல் சார்ந்ததாக நினைக்கும் கலையியல் கண்ணோட்டமில்லாத கணவன் மனைவியரின் அணுகுமுறையிலிருந்தே இந்த நிலை உருவாகின்றது. அதிகபட்சமான விவாகரத்துக்கள் நடப்பதன் பின்னணியிலுள்ள அறியப்படாமலிருக்கும் காரணம் பாலியலே என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.உறவுகள், உரசல்களாக மாறும் நிலை தாம்பத்ய வாழ்க்கையில் தவிர்க்க இயலாததாயிருக்கிறது. மனதில் ஏராளமான கனவுகளுடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் சிறிது காலத்திற்குப் பின்னர் கட்டிவைத்த வேலிக்குக் காவல் நிற்கிறவர்களாக மாறுவதே வழக்கம்.