-
இளைஞர்கள் தங்களுக்காக ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டு அதை அடைவதற்கான வழிமுறை களைக் கூறும் நூல் இது. வாழ்க்கையில் ஓர் லட்சியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கு வேண்டிய ஆற்றல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அந்த ஆற்றல்களை ஒவ்வோர் அடியாக, கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆற்றல்கள் ஒரேயடியாக வளர்ந்து விடாது. ஒவ்வொரு நாளும் விடாமல் பயிற்சி செய்து வளர்த்துக்கொள்ள வேண்டும் ஆகிய சூட்சுமங்களை நூல் ஆசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெளிவாக விளக்கியுள்ளார். சாதனை படைத்தவர்களின் உதாரணங்களையும் அவர்களுடன் தான் நிகழ்த்திய உரையாடல்களையும் நேரடியாகத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. ‘சாதனையாளர்கள் அனைவருமே விடிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர்கள். சோம்பேறித்தனத்தினால் ‘மூளைச் சோம்பல்’ ஏற்பட்டுவிடும்’ & போன்ற விஷயங்களை முன் வைக்கிறார். நம் நாட்டு மக்கள்தொகையில் 50% பேர் இளைஞர்கள். இன்றைய இளைஞர்களில் அனேகர் உத்வேகமுள்ளவர்களாகவும், ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டவர்களாகவும், அதை நோக்கி வேகமாக முன்னேறுபவர்களாகவும், நேரத்தை வீணாக்காமல் திட்டமிட்டு உழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இளைஞர்களுடைய ஆற்றலை நல்ல வழிகளில் வளர்ப்பது நம் அனைவரின் பொறுப்பு. நாணயம் விகடன் இதழில் வந்தபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்ற தொடர் இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூலை வாசித்தால் இளைஞர்கள் தெளிவு பெறுவார்கள் என்பது திண்ணம்.
-
This book Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati) is written by and published by Vikatan Prasuram.
இந்த நூல் எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி), பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati), எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி), பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati) tamil book.
|