book

அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள்

Abaranjakili Sonna Arputha Kathaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். புனிதவல்லி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354362
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

ஆப்பிரிகக் காடுகளில் பிறந்த பஞ்சவர்ணக் கிளியை சித்திரமங்கலம் என்ற ஊரைச் சார்ந்த மாணவன் செல்வராசு சந்தையில் விலைக்கு வாங்கினான். அதை சுதந்திரமாக பறக்கவிட அவன் எண்ணினான். ஆனால் அது அவனை விட்டுப் போகாமல் அவன் வீட்டிலேயே தங்கியது. ஆனால் அது பேசாமல் இருக்கிறதே என்று செல்வராசு வருந்தினான். ஒரு நாள் இரவு கிளி அவனுடன் பேசியது.

ஒரு சபத்தின் காரணமாகத்தான் பகலில் பேசமுடியாது என்பதை எடுத்துக்கூறி இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம்  என்று  கேட்டுக்கொண்டது. அது ஒரு வித்தியாசமான கிளி. ரொம்ப  அழகாகவும் சொஞ்சம் பெரிதாகவும் இருந்தது. செல்வராசும் அவன் நண்பர்களும் அதற்கு அபரஞ்சி என்று பேரிட்டனர். அது தனது வரலாற்றை  கதையாக இரவில் மட்டும் செல்வராசுக்கு சொன்னது. அது கதை சொல்ல ஆரம்பித்த போது அதற்கு வயது 216 .  

   தன வணிகனின் குடும்பத்தில் உள்ள அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற கிளி குடும்பச் சிக்கலைத்தீர்க்கவும் உதவியது. அங்கு பல ஆண்டுகள்  இருந்த பின் மாற்றம் விரும்பி சயாம் நாட்டிற்குச் சென்றது  கிளி. அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தது. இந்த நாட்டின் ரத்தன்பூர் சமஸ்தானத்தில் தான் தங்கியலிருந்து தனது அனுபவத்தை அபரஞ்சி செல்வராசுக்கு எடுத்துரைக்கிறது.

                                                                                                                                                        -  பதிப்பகத்தார்.