book

ஜயந்திபுரத் திருவிழா

Aindhupura Thiruvizha

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அநுத்தமா
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Kala Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :440
பதிப்பு :3
Published on :2013
Out of Stock
Add to Alert List

அன்றாடம் ஒரு பாத்திரத்தின் வெளித் தோற்றத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டே வந்தால், தண்ணீர் சிறிது உள்ளேயும் போவதாலும், கையின் உராய்தலினாலும், பழக்கத்தின் பயனாலும், சிறிது சிறிதாக உட்புறமும் சுத்தமாகி விடுவது இயல்பு. இதே கொள்கையைக் கொண்டுதான் சமுதாயங்கள் தொன்று தொட்டுச் சம்பிரதாயங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சம்பிரதாயங்கள் வாழும் வரை சமுதாயங்களும் உயிர் பெற்றுச் செழிக்கும் என்பது நம் பெரியோர்களின் துணிவு. ஆண், பெண் இருபாலரும் சமூகத்தில் சமபங்கு தொண்டாற்றி வருகிறார்கள் என்றாலும், சமூகத்தின் சின்னஞ் சிறு பிரதிபிம்பமாகிய வீட்டிற்குத் தலைவியாகிய பெண், சம்பிரதாயத்தில் அதிகப் பற்றுள்ளவளாகத் திகழ்கிறாள்.