book

துறவியின் இசைக்குறிப்புகள்

Thuraviyin Isaikuripugal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சண்முகம் சரவணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :149
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357318
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

துறவியின் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பு இந்த இயற்கைச் சித்தரிப்பு மூலமாகவே அர்த்தமாகிறது.  கவிதைகளை ஒரு முறை ஓட்டமாகப் படித்து வந்தால் அரிய இசை ஒன்றைக் கேட்டு மீளும் உணர்வுநிலையைப் பெற முடிகிறது.  கவிதைகளுக்கான பொருள் ஒருபுறம் கிடக்கட்டும். சண்முகம் சரவணனின் சொற்சேர்க்கைகளும் தொடர்ச்செறிவும் இசைக்குறிப்புகள்தாம்.

இந்தக் கவிதைகள் ஆழ்மன இசைக்குறிப்புகளேதான்.  சில குறிப்புகளைக் கவிஞரே மீட்டிக் காட்டிவிடுகிறார். சிலவற்றை வாசக மனம் மீட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்.  கவி மனமும் வாசக மனமும் இசையும் குறிப்புகளும் அநேகம்.  இயற்கையைக் கொண்டு கவி செய்யும் சாகசம் இது.

பெருமாள் முருகன்.