book

குலோத்துங்கன் கவிதைகள்

Kulothungan Kavithaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ச்செம்மல் முனைவர் ம.ரா.போ. குருசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177357257
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு,
Out of Stock
Add to Alert List

காதலும் கவிதையும் கைகோத்து நின்றால், எந்த மொழிக்குமே கலையமுதம் கிடைத்து, அந்த மொழி அமரத்துவம் உடையதாகிவிடும்.  பாருங்கள்.

.....என் நெஞ்சின்
ந்த்தா ஒளியென்னும் நங்காய்!
என் ஆற்றல்களின்
ஊற்றனைத்தும் உன்வடிவம்;
உயிருக்(கு) உயிரூட்டும்
காற்றனைத்தும் நின்மூச்சு;
காதலெனும் பேருண்வு
வாரிதியைத் தன் இரண்டு மைவிழியில்
தேக்கியுள காரிகையே         -கு.க., ப.444

காதலியின் வடிவம் எலும்பு, தசை, குருதிகளால் ஆயதன்று;  காதலுக்குரியவனின் ஆற்றல்களின் ஊற்று!  காதலியின் மூச்சு மானுடப் பெண்ணின் சுவாசமன்று;  உயிருக்கு உயிரூட்டும் காற்று!

'கடலினும் பெரிய கண்கள்' என்று கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வருணனையை விஞ்சுகிற இடம், பாருங்கள்;  'காதலெனும் பேருணர்வு வாஇதியைத் தன் இரண்டு மைவழியில் தேக்கியுள காரிகை!

முனைவர் ம.ரா.போ. குருசாமி