book

கூகை

Kuukai (Novel)

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ. தர்மன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :319
பதிப்பு :3
Published on :2011
ISBN :9788189359133
Out of Stock
Add to Alert List

சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. கூகை என்கிற கோட்டான் இடப்பெயற்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித்தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும், கோரம் என்று முத்திரை குத்துவதும், அதைக் காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும், இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் பொதுப் புத்தி. கூகையைத் தலித்துகளுக்கான குறியீடாக்கி சமகாலத் தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்.