-
அக்டோபர் 1997இல் பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் - சேனானி இருவரும் வீரப்பனால் கடத்தப்பட்டனர். ‘பெரிய ஆபிசர்க’ளெனத் தவறுதலாகக் கடத்தப்பட்ட அவர்கள் பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.கிருபாகர் - சேனானியிடம் “உங்க ரெண்டுபேரயும் நான் கிட்நாப் செஞ்சிருக்கேன்” என அடிக்கடி முறுக்கிய மீசையுடன் நினைவூட்ட வேண்டியிருந்த வீரப்பன், “நான் யானைங்களக் கொல்றத நிறுத்திப் பல வருஷங்களாயிடிச்சின்னு சொன்னா யாரும் நம்பறதே கெடையாது” என்று புலம்புகிற வீரப்பன், “ஐயோ, அந்த வீரப்பன் இவன எதுக்கு விடுதலை செஞ்சானோ? நான் என்ன பாவத்தச் செஞ்சேன். அவன் வீடு விளங்காமப் போவ” என பிணையக் கைதியின் மனைவியால் சபிக்கப்படும் வீரப்பன், இப்படி முனுசாமி வீரப்பன் (எ) வீரப்பன் தொடர்பாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளைத் தாண்டி வீரப்பனின் உண்மையான முகம் இயல்பாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வீரப்பன் & கோவுக்குக் காடு, வனவிலங்குகள், பறவைகள் பற்றிப் பாடம் நிகழ்த்திய கிருபாகர் - சேனானியால் எழுதப்பட்ட இந்நூல் நாம் அறியாத வீரப்பனை நமக்குக் காட்டுகிறது.
-
This book Veerappan Pidiyil Pathinangu Natkal is written by and published by Kalachuvadu Pathippagam.
இந்த நூல் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர் சேனானி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veerappan Pidiyil Pathinangu Natkal, வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர் சேனானி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கிருபாகர் சேனானி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Veerappan Pidiyil Pathinangu Natkal tamil book.
|