book

தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல்

Thannai Than Ethirgollal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸர்ஸ்ரீ
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

இந்நூல் ஆசிரியர் ஆன்மிக அறிவியல் பயிற்சி பெற வேண்டி, தன் கல்லூரி ஆசிரியர் பணியை துறந்தார்.
பல ஆண்டுகளாக தான் அனுபவத்தில் அறிந்து தெளிந்த ஞானத்தை, ஹெர்குலிஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலமாகவும், தான் எழுதிய "தன்னைத்தான் எதிர் கொள்ளல் என்ற நூலின் மூலமாகவும் சொல்கிறார்.
ஜிதேந்திரன் என்பவன் தன்னுடைய மனைவியுடன் ஏற்படும் பிரச்னைகளால் கஷ்டப்படுகிறான். அவன் கோவிலுக்கு வருகிறான். பூசாரி, விஷயத்தை தெரிந்து கொண்டு ஹெர்குலிசை வெளியேற்ற வேண்டி,  வேலை கொடுக்கிறான். அதாவது ஹெர்குலிஸ் ஜிதேந்திரனின் வீட்டுக்கு சென்று, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.
ஹெர்குலிஸ், அன்னையை வணங்கி விட்டு ஜிதேந்திரனின் வீட்டிற்கு சென்றான். அங்கு பிரச்னையை பார்த்து, மனதிற்குள் அன்னையை வழிபட்டான். அவன் உள்ளுணர்வு அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இதுகுறித்து ஹெர்குலிஸ் ஜிதேந்திரனிடம் சொன்னான். "குழந்தைகள் தவறு செய்வதை கண்டு நீ கோபம் கொள்ளாமல், நீ செய்யும் தவறுகளை எண்ணிப்பார். நீ உன் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்கிறாயா? இந்த தேடலை தொடங்கு (பக்.47) என்பது சிறப்பனாது.
துன்பங்களில் இருந்து விடுதலை பெற விரும்பினால், மனிதர்களை மாற்றுவதை விட்டு விட்டு, அவன் தன் பிடிவாதத்தை கைவிட வேண்டும் (பக்.58). இம்மாதிரியான சொற்றொடர்கள், ஆசிரியரின் தத்துவ ஞானத்தின் புலமைக்குச் சான்று.
ஆசிரியர் ஹெர்குலிஸ் எவ்வாறு பல மனிதர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிறான் என்பதை எளிய தமிழ் உரைநடையில் விவரிக்கிறார்.  மனோரீதியான மற்றும் வேதாந்தக் கருத்துக்களை தொகுத்தும், வகுத்தும், அழகுற விளக்குகிறார். "சமூகத்தில் சுயஞானம் பெற்ற புனிதர்களை சமூகம் மதிக்கத்தான் செய்கிறது. ஆனால், தமது குழந்தைகள் அவர்களைப் போல் வைராக்கியம் பெறக்கூடாது என்றே பயப்படுகின்றனர் (பக்.102).
 உங்கள் மனதை உள்முகமாக திருப்புவதற்கும், உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கும்  இந்த நூல் வாய்ப்பு அளிக்கிறது.
"தன் அமைதியின்றி உலக அமைதி இல்லை என்னும் ஆன்மிகத்தை விவரிக்கும் ஒரு கருவூலம். அனைத்து நூலகங்களிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.
- சிட்டிபாபு