book

உஷார் உளவாளி

Ushar ulavaali

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதாங்கன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :207
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788189780500
குறிச்சொற்கள் :தகவல்கள், சம்பவங்கள், நிஜம், சரித்திரம், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

எங்கேயாவது, எப்போதாவது, எதற்காவது மூளையைக் கூர்மையாக்கி, உடலைச் சீராக்கி சாகஸம் பண்ணியிருப்போம்.
இந்த சாகஸத்தைத் தொடர நினைக்கும்போது, அதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தால்... அவ்வளவுதான்! கழுவும் மீனில் நழுவும் மீனாகி விடுவோம்.

ஆதலால்தான், உளவியல் ரீதியாக 'ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ'க்களைப் பார்த்து நாமும் 'ஹீரோ'க்களாகவே மாறிவிடுகிறோம். திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் விறுவிறு, சுறுசுறு விஷயங்களில் நம்மையும் பொருத்திப் பார்க்கிறோம்.

ஆனால், உண்மையில் உளவு வேலை என்பது காற்றில் கயிறு திரிப்பதற்குச் சமமானது. எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில், திக்குத் தெரியாத நாட்டில், ஆள் பழக்கமில்லாத இடத்தில், அந்நாட்டைப் பற்றி உளவு பார்க்க எவ்வளவு தைரியம் வேண்டும்?

அத்தகைய நிஜ ஹீரோக்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் சந்தித்த திகில் திருப்பங்களையும், திடுக்கிட வைக்கும் சம்பவங்களையும் சஸ்பென்ஸ் குறையாத ஹாலிவுட் படம் போல விறுவிறுப்பாக எழுதியுள்ளார் சுதாங்கன்.

இந்தத் தொடர் ஜூ.வி.யில் வந்தபோது ஏகப்பட்ட வரவேற்புகள். பலவிதமான பாராட்டுக் கடிதங்கள்... அப்போதே தெரிந்துவிட்டது வாசகர்களின் மனஓட்டங்கள்! வேதம் முதல் நவீன விஞ்ஞானம் வரை பல்வேறு முகங்களில் பரவிக்கிடந்த உளவுத் துறை, தற்போது உலகையே உள்ளங்கையில் வைத்திருக்கிறது என்பதுதான் வியப்பான உண்மை.

உலகத்தில் நடந்த&நடக்கிற&நடக்கப்போகிற சம்பவங்களுக்கும், அசம்பாவிதங்களுக்கும் அடிப்படைக் காரணியே உளவுத் துறைதான் என்கிற உண்மையை, இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே படிப்படியாகப் புரிந்துகொள்வீர்கள்.

இனி உளவாளிகளைக் காண உஷாராகுங்கள்..!