book

சில வித்தியாசங்கள்

Sila Vithiyasangal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184936759
Add to Cart

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை திரும்பப் படித்தபோது என் எழுத்து முறையில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் உடனே புலப்பட்டது. அது பெரும்பாலும் எல்லாக் கதைகளையும் தன்மை ஒருமையில் எழுதி இருப்பது. அது கதை சொல்லும் எவ்வளவோ முறைகளில் ஒன்று. இந்த முறையில் இருக்கும் கட்டுப்பாடு எனக்குப் பிடிக்கிறது. கதை சொல்பவனை விட்டு விலக முடியாத நிர்பந்தத்தில் இருக்கும் சவால் என்னைக் கவர்கிறது. மேலும் எழுத்தில் உள்ள துல்யமான சந்தோஷங்களில் ஒன்று என்னால் பலவித வடிவங்களை ஏற்க முடிகிறது. என் சொந்த மன விகற்பங்களிலிருந்து விலகி என்னால் என்னை ஏழை குமாஸ்தாவாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. வீணை வித்வானாக பிரபலத்துக்கு அலைய முடிகிறது. இளம் கணவனை நீந்தத் தெரியாமல் ஆற்றில் மிதக்க வைக்க முடிகிறது. மாந்திரிகத்திற்கும் என்னால் கட்டுப்பட முடிகிறது. கனவுகள் எனக்கு நிறமாகின்றன. நிஜங்கள் கனவுகளாகின்றன. அழகான பெண்களை ஆச்சரியம் நிறைந்த முனைகளில் சந்திக்க முடிகிறது. போலீஸ் பயமில்லாமல் துப்பாக்கிகள் சுட்டு பேப்பரில் ரத்தம் சிந்த வைக்க முடிகிறது. நிஜத்தையும் பொய்யையும் எனக்கே உரித்தான ரசாயனத்தில் கலந்து, நான் மெளனமாகக் கவனிக்கும் சம்பவங்களையும் நபர்களையும் என் விருப்பத்திற்கு அழைத்து வாசிப்பவர்களையும் உடன் அழைத்துச் செல்லும் இந்த அரை மயக்க உலகில் 'நான் எனும் பொய்யை நடத்துவோன் நானே'.