book

பாரதியின் பரிமாணங்கள்

Bharathiyin Parimanangal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :86
பதிப்பு :2
Published on :2004
ISBN :9878188048241
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள்
Out of Stock
Add to Alert List

பாரதியின் பரிமாணங்கள் ' என்னும் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் பரிணமிக்கின்றன. அறிஞர் பெருமக்களான ப. ஜீவானந்தம், ம. பொ. சிவஞானம், எம்.ஆர். வெங்கட்ராமன் , சாமி சிதம்பரனார், கே, ராமநாதன், வி.சக்கரைச் செட்டியார், கே. முத்தையா, ஐ, மாயாண்டி பாரதி, எஸ். இராமகிருஷணன் ஆகியோர் எழுதிய 9 கட்டுரைகளும் பாரதி எழுதிய ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.               
                                                                                                                            
பாரதி தமிழ்மொழியின் மலர்ச்சிக்கு வித்திட்டார். அதை மேலும் ஒரு படி உயர்த்தி மேம்படச் செய்வது இந்தத் தலைமுறையின் கடமை' என்ற உணர்வை ஊட்டுகிறார் எம். ஆர். வெங்கட்ராமன்.

போரும், பகைமையும், அடிமைத்தனமும்  அநியாயச்சுரண்டலும் இல்லாத, வாழும் வகைக்கு வளமான வழிகாட்டி முரசு அறைகிறார் பாரதி' என்று முழங்குகிறார் கே. ராமநாதன்.தமிழனைவிட உயர்ந்தவன் உலகில் வேறெங்கும் இருக்கக்கூடாது என்பதே பாரதியின் உள்ளடக்கியவை என்பது அவர் பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக அறியலாம்.

                                                                                                                                                    -  பதிப்பகத்தார்.