book

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :69
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cart

 பட்டுக்கோட்டையின் பாடல்கள் சின்ன வயதிலேயே எல்லோரையும் ஈர்த்தது போல் என்னையும் ஈர்த்தது. பின்னர், மறைந்த எனது தந்தையார் திரு. ஜானகிகாந்தன் அவர்கள் மூலம்  பட்டுக்கோட்டையாரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் பட்டுக்கோட்டையாரைப்ற்றி  திரு.ஜீவபாரதி எழுதிய பழகியோர் பார்வையில் பட்டுக்கோட்டை என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர், திரைப்படத் தொடர்புடைய புத்தகங்களைப் படிக்கும் போது அதில் வந்த பட்டுக்கோட்டையாரைப் பற்றிய விஷயங்களையும், தோழர்கள் நடத்திய கூட்டத்தில்பேசிய பேச்சின் சுருக்கமும், கவிஞரைப்பற்றிப் பலர் எழுதின நூல்களும்  பல பேர்கள் பல போட்டிகளில் சொன்ன கருத்துகளின் தொகுப்பும் இதனடிப்படையில் என்னுள்  கன்ன்று கொண்டிருந்த பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஒரு நூல் எழுதவேண்டுமென்கிற ஆர்வத்தைத் தூண்டியது,  பட்டுக்கோட்டையாரைப்பற்றி நான் எழுதிய சுவாரஸ்யமான விஷயங்கள். அவன் கோட்டை என்கிற தலைப்பில் கட்டுரையாக தீக்கதிர் நாளிதழில் வெளிவந்தது. அதனைப்படித்த பல தோழர்கள் உங்கள் கட்டுரை நன்றாகவிருந்ததெனப் பாராட்டினார்கள். அதுவே அம்மாபெலும் மக்கள்  கவிஞனுக்கு என்னுடைய இந்தச் சிறிய எளிய படைப்பாகும்.

                                                                                                                                                      - கார்த்திகேயன்.