-
'சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை
ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும்
ஈர்க்கவல்லது!'
_ இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்'
என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். 1935_ம் ஆண்டு புத்தக வடிவம் பெற்ற
இந்நாவல், அவரது நீண்டதூர இலக்கியப் பயணத்துக்கு உத்வேகமாக அமைந்தது என்றால், அது
மிகையாகாது.
உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழ் தேடித் தந்தவர்களில்
குறிப்பிடத்தக்கவரான இவர், இந்திய மக்களுடைய வாழ்வியலின் இயல்புத் தன்மை எள்ளளவும்
சிதறாமல் ஆங்கில மொழியில் இலக்கியம் படைத்துச் சாதனை புரிந்தவர்.
'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 'ஆனந்த விகடன்'
இதழில் 1937_ம் ஆண்டு 'சுவாமியும் சிநேகிதர்களும்' என்ற தலைப்பில் தொடர்கதையாக
வெளிவந்தது. சுவாமி என்ற சிறுவனை மையப் பாத்திரமாகக் கொண்டுள்ள இந்நாவலைப்
படிப்பவர்கள், தங்கள் பள்ளிப் பருவத்து நினைவுகளை இன்பத்தோடு அசைபோடும்
வாய்ப்பினைப் பெறுவார்கள். சிறுவர்களின் உலகில் பயணிக்கும்போது, அந்தக்
காலகட்டத்தின் சமூக நிலையை அறியும் வாய்ப்பையும் இந்நூல் வழங்குகிறது.
மூல நூலின் ஜீவன் சிறிதளவும் குறையாமல் இருக்கும்வண்ணம் இந்தப் புத்தகத்தைச்
சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் கிருஷ்ணசுவாமி. ஓவியர் மாலியின் கோட்டோ
வியங்கள், நாவலைப் படிக்கும் ஆர்வத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.
ஆர்.கே.நாராயணின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நடப்பாண்டில்(2006), அவரது
நாவல் 'விகடன் பிரசுரம்' மூலம் வெளிவருவது இலக்கியச் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க
நிகழ்வாகும்.
-
This book Swamiyum Snehithargalum is written by R.K.Narayanan and published by Vikatan Prasuram.
இந்த நூல் சுவாமியும் சிநேகிதர்களும், ஆர்.கே. நாராயண் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Swamiyum Snehithargalum, சுவாமியும் சிநேகிதர்களும், ஆர்.கே. நாராயண், R.K.Narayanan, Kathaigal - Tamil story, கதைகள் , R.K.Narayanan Kathaigal - Tamil story,ஆர்.கே. நாராயண் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.K.Narayanan books, buy Vikatan Prasuram books online, buy Swamiyum Snehithargalum tamil book.
|