-
உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.
சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா " நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது
-
This book Varalaatrup Porulmudhalvaadham is written by Aasiriyar Kulu and published by New century book house.
இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalaatrup Porulmudhalvaadham, வரலாற்றுப் பொருள்முதல்வாதம், ஆசிரியர் குழு, Aasiriyar Kulu, Pothu, பொது , Aasiriyar Kulu Pothu,ஆசிரியர் குழு பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Aasiriyar Kulu books, buy New century book house books online, buy Varalaatrup Porulmudhalvaadham tamil book.
|