book

கத்தியின்றி ரத்தமின்றி..!

Kathiyindri rathamindri…!

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லாரா கோப்பா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :4
Published on :2006
ISBN :9788189780371
குறிச்சொற்கள் :போராட்டங்கள், சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், நினைவுங்கள்
Out of Stock
Add to Alert List

எப்படியும் -வாழலாம் என வாழ்பவர்கள் ஏராளம். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்வை வகுத்து வாழ்பவர்கள், புகழின் சுவடுகள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய புகழ் வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதி.
வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியவுடன், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டாடினர். ஆனால், ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் மனிதர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தர தாம் வாழும் பாதையை போராட்டக்களமாக்கி இந்தத் தம்பதி இப்போதும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

பண்ணையார்களிடம் காலம் முழுவதும் உழைத்தாலும், அதில் கிடைத்த சொற்ப கூலியைப் பெற்ற ஏழை மக்கள் வாழ்வில் மாற்றம் பெறாமல் இருந்தனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற எண்ணி, இருப்பவர்களிடம் நிலத்தை தானம் பெற்று, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க 'பூதான இயக்க'த்தை தொடங்கி நடைமுறைப்படுத்தினர்.

தம் வாழ்நாளில் பல போராட்டங்களை செய்த இந்தத் தம்பதி, தங்களது எழுபதாவது வயது கடந்தநிலையில், உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராதவர்களாக சமீபத்தில் இறால் பண்ணைகளை மூடச்சொல்லி போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஏழை மக்களின் முன்னேற்றம் _ விடுதலை போராட்டத்தின் மூலமே சாத்தியமென பலர் போராடி வருகின்றனர். ஆனால், இந்த தம்பதி, காந்திய வழியில், அகிம்சையில் பலவற்றை சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா என்பவர் புத்தகமாக எழுதிய கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதியரின் போராட்ட வாழ்க்கை வரலாறு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் புத்தகத்தை சுவாரசியமான நடையில் மகாதேவன் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார்.

'தோன்றின் புகழொடு தோன்றுக...' என்பதற்கு ஏற்ப, பிறருக்காக வாழ்ந்தவர்களின் வரலாறு வருங்கால தலைமுறைக்கு பாடமாக அமையும். பாடம் கற்போம்... பிறருக்காகவும் வாழ்வோம்!