தம்பி நிகரனின் கவிதைகள் வாசிக்கக் கிடைத்தன. மகிழ்ச்சியும் மிரட்சியும் ஒரே சேர என்னை ஒரே நேரத்தில் கவ்விக் கொண்டன. குறைந்த வயதில் எழுத வந்திருப்பதில் மகிழ்ச்சி. சிறப்பாக எழுதியிருப்பதால் மிரட்சி.
பிறருக்கு நம்பிக்கை சொல்வதற்கு முன் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா என சோதிக்க வேண்டும்.
சோதிப்பு வெறும் சோதனைகளை மட்டுமல்ல பெரும் சாதனைக்கு அச்சாரம் இடும். அப்படி ஒரு சாதனையே இத்தொகுப்பு.
நம்பிக்கை பொய்ப்பதில்லை. பொய்த்தால் அதன் பேர் நம்பிக்கையில்லை. எல்லோர் மீதும் நம்பிக்கை கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கும் போது உங்கள் மீது எனக்கு இருக்காதா என்ன?