கனவுகள் நிறைவேறாத ஆழ் மனதின் வெளியீடுகளே என்று அறிவியலாரும்-
கனவுகள் துர்தேவதைகளின் திருத்தூதர்கள் என்று மதவாதிகளும் -
கனவுகள் நெஞ்சில் - நீக்கமற நிறைந்திருக்கும் நினைவுகளின் மறுபதிப்பே என்று ஒரு சிலரும்-
கனவுகள் வாழ்க்கையில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன் கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகளாகும் என்று மற்றும் சிலரும் கூறியுள்ளனர்.
மிருகங்களும், பறவைகளும் கூட கனவு காண்பதாக தமது ஆய்வின் மூலம் அறிவியலார் கண்டுணர்ந்து கூறியுள்ளனர்.
இத்தகைய கனவுகளைப் பற்றியப் பொதுக் கருத்துக்களைப் பகுத்தும், தொகுத்தும், "கனவுகளும் பலன்களும்" எனும் இச்சிறு நூல் வெளியிடப்படுகிறது.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இறுதி முடிவாக இல்லாமல், இப்படியும் இருக்கலாம் என்ற ஆய்வு நோக்கோடு கனவுக் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.
மு. செல்வராசன்