சப்தஸ்வரத் தூண்கள் நமது தமிழகத்தின் இசைப் பொக்கிஷம். கல்லில் வெவ்வேறு இசை ஒலி அமைத்துத் திகழும் அற்புதம் அது. மதுரை, நெல்லையில் காணலாம். அதேபோல் ஜலதரங்க இசையும்தான். கிண்ணங்களில் அந்தந்த ஸ்வரத்துக்குத் தகுந்தாற்போல் நீர் நிறைந்து, இசை கோலால் நாதம் எழுப்பும் அற்புத தமிழக இசை ஜலதரங்கம் ஆகும். ஏன் இந்தக் கலை இப்போது கருகி வருகிறது!