நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை `தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது `ப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? என்று கணித்துவிட முடியுமா? உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அவர் குறித்த ஒரு துல்லியமான நிலைப்பாட்டை உங்களால் எடுத்துவிட முடியுமா? உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்த தீர்மானமான முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியுமா? மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் முடியும் என்பதுதான் உங்கள் பதில் என்று வைத்துக் கொள்வோம். எனில், உங்கள் கணிப்பு எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா? எப்போது சரியாக இருக்கும்? அல்லது எப்போது தவறாகப் போகக்கூடும்…? மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ”மிஸ்டர் க்ளாட்வெல் வரம் பெற்ற ஒரு கதை சொல்லி, எங்கே சென்றாலும் நினைவில் நிற்கக்கூடிய பாத்திரங்களையும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கண்டறியக் கூ டிய திறமையுள்ளவர்” – ஜார்ஜ் ஆண்டர்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்: நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்” – டேவிட் புரூக்ஸ், நியூயார்க் டைம்ஸ் புக் ரெவியூ.
ப்ளிங்க்
No Comments Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
விருந்தினர் கருத்துக்கள்
இந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!
உங்கள் கருத்துக்களை வெளியிட ...
Press Ctrl+g to toggle between English and Tamil
You must be logged in to post a comment.
ஏனைய செய்திகள்