விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

Vikatan Year Book 2013 - விகடன் இயர் புக் 2013

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764666
Pages : 392
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விகடன் சுஜாதா மலர் பாரதியார் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது தகவல்களின் உலகம். எங்கெங்கோ கொட்டிக் கிடக்கும் தகவல்களை தேடித் திரட்டி, அவரவர் தேவைக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப தொகுத்துப் பார்த்து, அதிலிருந்து கிடைக்கும் அரிய உண்மைகளைப் பயன்படுத்தி, தொலைநோக்கான முடிவை எடுப்பவர்களே போட்டியில் முந்தும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இலக்கு எது என்று நிர்ணயிப்பதற்கும், அதை நோக்கிக் குறி பார்த்து எய்வதற்குமான திறமை எவ்வளவுதான் இருந்தாலும்... தகவல் என்ற வலிமையான அஸ்திரம் இல்லாமல் எவரும் இங்கே நினைத்ததைச் சாதித்துவிட முடியாது. அந்த வகையில், 85 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து, சுவையோடு அளித்து வரும் விகடன் குழுமத்திலிருந்து முதன்முறையாக வெளியாகும் இந்த 'விகடன் இயர் புக்' எத்தகைய துல்லியத்தோடும், சுவாரஸ்யத்தோடும் தொகுக்கப்பட்டிருக்கும் என்பது தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை! கல்வி, வேலைவாய்ப்பு, சுயமுன்னேற்றம் என்று பலவகையிலும் தாகம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு மட்டுமின்றி... அனுபவத்தில் மூத்தவர்களாக, வெவ்வேறு துறைகளில் இயங்கி வரும் பெரியவர்களையும் மனதில் கொண்டே இந்த 'விகடன் இயர் புக் - 2013' உருவாகி இருக்கிறது. ஆழ்ந்த அனுபவம் பெற்ற செய்தியாளர்கள் தொடங்கி... அரசியல், சமுதாயம், வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், தொழில்துறை, பொருளாதாரம் என்று பல்வேறு துறைகளில் தனித்தன்மையோடு தேர்ந்த நிபுணர்களும் இந்த தகவல் களஞ்சியத்துக்காக தங்களின் தேர்ந்த உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் அனைவரையும் அறிவுச் செல்வந்தர்களாகப் பெருமைகொள்ள வைக்கும் ஒரு பத்தாயமாக விகடன் இயர் புக் விளங்குகிறது. மிக முக்கிய நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், அதிரடித் திருப்பங்கள், ஆச்சர்யப்பட வைத்த சுவாரஸ்யங்கள், நடுங்க வைத்த அதிர்வுகள் என 2012-ம் ஆண்டின் காலக் கண்ணாடியாக அத்தனைவிதமான முக்கிய நிகழ்வுகளையும் கண் முன்னே இது நிறுத்துகிறது. உலக நாடுகள், இந்திய மாநிலங்கள், தமிழக மாவட்டங்கள் குறித்த தகவல்கள் மிகத் துல்லியமாகச் சேகரிக்கப்பட்டு, நீங்களெல்லாம் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் அழகிய வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முக்கியக் கேள்வியாகக் கேட்கப்படும் செம்மொழித் தமிழ் (இருமொழிக் கொள்கை என்றும் கேட்கிறார்கள்) குறித்த மிக விளக்கமான கட்டுரை முத்தாய்ப்பு முன்னுதாரணமாகச் சொல்லப்படும் அளவுக்கு நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை குறித்த ஆக்கபூர்வத் தகவல்கள், உலக நிறுவனங்கள் குறித்த விளக்கங்கள், தமிழகத்தின் அடையாளங்களாக விளங்கும் முக்கிய இடங்கள் குறித்த தெளிவுகள், தமிழகச் சுற்றுச் சூழல் குறித்த ஆய்வுகள், தமிழக அரசின் சமூல நலத் திட்டங்கள் குறித்த விரிவான பார்வை, தமிழகத்தின் பால் வளம் என்று சாலச்சிறந்த ஆசிரிய பெருமக்களால் மிகுந்த கவனத்தோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது விகடன் இயர் புக் - 2013. தகவல் அஸ்திரத்தை அளிப்பதோடு, அதை செவ்வனே எய்யக்கூடிய வழிமுறைகளையும் சேர்த்தே தருகின்றன பல கட்டுரைகள். லட்சியப் பதவிகளை அடைவதற்கான தேர்வுகளுக்கு இளைய சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் பக்குவத்தை, விரல் பிடித்து வழி நடத்தும் கட்டுரைகள் அவை. பொதுத் தமிழ்ப் பாடத்தின் முக்கியக் கேள்விகள், ஆன்மிக விளக்கங்கள், டி.என்.பி.எஸ்.சி குறித்த விரிவான பார்வை, குவிஸ் பக்கங்கள், புதிய நாடுகளைப் பற்றிய ஆச்சர்யங்கள், பூமியின் தோற்றம் மற்றும் கண்டங்கள் குறித்த தகவல் திரட்டுகள், அளவுகளும் அலகுகளும் குறித்த விவரங்கள், தங்கம் குறித்த அண்மைத் தகவல்கள் என எவரும் தவறவிட முடியாதபடி அமைத்திருக்கிறோம் இந்த பொது அறிவுப் பொக்கிஷத்தை. இளைய தலைமுறையின் நெஞ்சுரத்துக்கு ஊக்கமூட்டும் விதமாக குன்றக்குடி அடிகள், தமிழருவி மணியன், இறையன்பு ஐ.ஏ.எஸ்., நெல்லை ஜெயந்தா ஆகியோரின் தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் இதன் தனி அடையாளம். இதற்கெனவே தங்கள் படைப்புகளை அளித்திருக்கும் பிரபலங்களின் பட்டியல் அத்தனை நேர்த்தியானது... பொருத்தமானது. ‘அனைவருக்கும் வேலை... அசத்தப்போகிறது தமிழகம்’ எனும் அட்டைப்படக் கட்டுரையும், இன்றைய இளைய தலைமுறையினரிடம் நடத்தப்பட்ட, ‘100 வருடங்கள்... 100 தமிழர்கள்’ கருத்தாய்வு முடிவும் சிறப்பான நம்பிக்கையை எவருக்குள்ளும் விதைக்கும். விகடன் பாசறையிலிருந்து காலத்தின் தேவையாக வெளிப்பட்டிருக்கும் இந்த முதல் 'இயர் புக்' பற்றிய உங்கள் அனைவரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மலரப் போகும் இந்த 'இயர் புக்' வரிசையை மேலும் மேலும் செம்மையாக்கிக் கொடுப்பதற்கு... எங்கள் அனுபவம் மட்டுமின்றி, உங்கள் ஆலோசனையும் உறுதுணையாக இருக்கும். உங்களின் வெற்றியே எங்களின் வரலாறு..!

  • This book Vikatan Year Book 2013 is written by Aasiriyar Kulu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விகடன் இயர் புக் 2013, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan Year Book 2013, விகடன் இயர் புக் 2013, ஆசிரியர் குழு, Aasiriyar Kulu, Pothu, பொது , Aasiriyar Kulu Pothu,ஆசிரியர் குழு பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aasiriyar Kulu books, buy Vikatan Prasuram books online, buy Vikatan Year Book 2013 tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


educational wall charts CHILD SAFETY - Child Safety (Educational Wall Charts)

my cute lift the flap VEHICLES - Vehicles (My Cute Lift the Flap)

educational wall charts PARTS OF THE BODY - Parts of the Body (Educational Wall Charts)

பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன் - Panmuga Parvaiyil Puthumaipittan

பெண்கள் மலர் 2013

My Copy COLOUR and WRITE Along BIRDS - Copy Colour: Birds (My Copy Colour and Write Along)

நர்மதாவின் தமிழ் அகராதி 23000 தமிழ்ச் சொற்கள்

சமூக அறிவியல் TET I, II TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Samooga Ariviyal TET I,II TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

educational wall charts TRANSPORT 1 - Transport: 1 (Educational Wall Charts)

Chutti Creations I - Chutti Creations l

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்

அலாஸ்கா - Alaska

மணிமேகலை ஆங்கில.ஆங்கில.தமிழ் அகராதி

காமசூத்திரம்

எண்ணம் வசப்படும் - Ennam vasappadum

கொழும்பு முதல் அல்மோரா வரை ....!

படுகளம்( கொங்கு மண்ணில் நாவல்)

அறிவியல் மேதைகள் - Arivial Methaikal

உலோகங்களின் கதை

Modern India

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலையணை மந்திரம் - Thalayanai manthiram

அலங்காரப்ரியர்கள்

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

சிவப்பு சீனா - Sivappu China

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

அதிதி - Athithi

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk