book

தேவாரத் திருவுலா (பாகம் 1)

Devarath thiruvila(part 1)

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். சுதா சேஷய்யன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189780067
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
Out of Stock
Add to Alert List

தேவாரப் பாடல்களை நினைத்தாலே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் இறை தொண்டுதான் நமது நெஞ்சை ஆட்கொள்ளும். ஈசன் திருவடிகளில் பணிந்து, அவன் உணர்வில் கலந்து உருகிஉருகி அந்த மகான்கள் பாடிய தேவாரப் பாடல்கள், தமிழ் இசையை தெய்விக இசையாக உலகம் முழுவதும் பறைசாற்றின!
ஈசன் குடிகொண்ட கோயில்கள் அருள் கொடை வழங்குவதைப் புரிந்துகொண்ட மகான்கள், அந்தச் சிறப்பை மேலும் அறிந்துகொள்வதற்காகவே தேடித்தேடிச் சென்று ஆலய தரிசனம் செய்தனர். அந்த ஆலயங்களில் தாம் பெற்ற தெய்விக உணர்வைப் பிறரும் பெறவேண்டும் என்பதற்காகவே இறைவனின் பெருமைகளைப் பாடியும் கொடுத்தனர்.

சக்தி விகடன் இதழில் தொடராக வந்துகொண்டிருக்கும் 'தேவாரத் திருவுலா!' இப்போது புத்தக வடிவில் முதல் பாகமாக வருகிறது.

தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலங்களுக்கு பக்தி சிரத்தையோடு சென்று வணங்கி, ஈசன் நடத்திய திருவிளையாடல் கதைகளை அருள்மழையாகப் பொழிந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். ஒவ்வொரு திருத்தலங்களாகப் பாடிக்கொண்டே சென்ற மகான்கள் பற்றியும், சமய பேதங்களால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாக இணைக்கத் தங்களின் பாடல்களையே பயன்படுத்தியுள்ள விதத்தையும் ஒரு கதாகாலட்சேபத்தின் சுவையோடு வடித்துக் காட்டியுள்ளார். அக்கால தமிழகத்தின் சமுதாய மேன்மை பற்றி, அந்தக் கதைகளும் பாடல்களும் நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

இந்தப் புத்தகம், அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்க வைத்து உங்களை ஈர்க்கும் என நம்புகிறேன்.