book

அம்பானி சகோதரர்கள்

Ambani sakothararkal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுசி. திருஞானம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2008
Out of Stock
Add to Alert List

திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக 350 sq ft (33 m2)அது இருந்தது. ஆரம்பத்தில், தங்களுக்கு வணிகத்தில் உதவ இரண்டு உதவியாளர்களை அவர்கள் அமர்த்திக் கொண்டனர். 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். இருவரும் வெவ்வேறான வணிக மனோநிலை கொண்டிருந்தனர் என்றும் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர் என்றும் நம்பப்படுகிறது. திரு.தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். திருபாய் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாதவர். அவர் கையிருப்புகளை குவித்து, விலை உயர்வை எதிர்நோக்கி, லாபத்தை குவிப்பதில் நம்பிக்கையுற்றிருந்தார்.[8]() 1968-ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு விலையுயர்ந்த மாளிகை வீட்டிற்கு அவர் இடம் பெயர்ந்தார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1970களின் பிற்பகுதியில் சுமார் 10 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது