book

அன்பு ஒரு ஆன்மீக அனுபவம்

Anbu Oru Aanmega Anubhavam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :236
பதிப்பு :6
Published on :2011
ISBN :9788184021103
Out of Stock
Add to Alert List

இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும். இறைவன் மீது கொண்டுள்ள ஆன்மீக உணர்வை அதிகரிப்பது நம்  ஆன்மீக பாதையின் முக்கியமான அங்கமாகும். ஏனென்றால், இறைவன் மீது தீவிர ஆன்மீக உணர்வை கொள்ளும்போது, அது இறைவன் மீது தீவிர பக்தி உருவாக வழிவகுக்கிறது. இவ்வாறு தீவிர பக்தி உருவாகும்போது, நம்மைப் பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தனை செய்கிறோம். இந்த நிலையை அடைந்த பின், இறைவன் நம் மீது அருள் பொழிய, நாம் மேலும் மேலும் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். ஆன்மீக பயிற்சியை செய்வதால் மட்டுமே ஆன்மீக உணர்வு விழிப்படையும் என பல ஸாதகர்கள் எண்ணுகிறார்கள். தத்துவ ரீதியாக இது சரியாக இருப்பினும், ஆன்மீக பயிற்சி செய்யும் சகலராலும் இந்நிலையை இலகுவாக அடைய முடியும் என்ற உத்தரவாதம் இல்லை. ஏனென்றால், நாம் அனுபவிக்கும் ஆன்மீக உணர்வு, ஆன்மீக பயிற்சியினால் மட்டுமே ஏற்பட்டதெனில், அதற்கு பல காரணிகள் இருக்கலாம். ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதன் நோக்கம், இறைவனோடு ஒன்றிணைவதில் உள்ள தீவிர ஆர்வம், நமது ஆழ்மனதில் இறைவனை பற்றி உருவாகியுள்ள மையம், ஒருவர் செய்யும் ஆன்மீக பயிற்சி மற்றும் அவர் பின்பற்றும் ஆன்மீக பாதை போன்றவை அக்காரணிகளாம். விரைவாக ஆன்மீக உணர்வை அதிகரிக்க, முதலில் நமது ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் விஷயங்கள் யாவை என தெரிந்துகொண்டு, அதன் பின், முக்கியமாக, அவற்றை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.