book

என்னை விட்டுப் போகாதே!

Ennai Vittu Pogathe

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

அவனுடைய பழைய மாதங்கியா இது?
படிகள் வளையும் இருட்டுத் திருப்பத்தில், சட்டென்று அவனை இழுத்து இறுக்கிக்கொண்டவளா இவள்? அன்றைக்கு வெளிச்சத்தைப் பிரதிபலித்த பளபளப்பான அவளுடைய வெல்வெட் சருமமா இது? வெளிச்சமில்லாத மூலைகளில் உதடு என்று நினைத்து அவன் மூக்கை ஈரம் பண்ணிவிட்டு விலகும் அந்த பட்டு இதழ்களா இவை? தியேட்டர் இருட்டில், அவனுடைய உள்ளங்கையைப் பற்றி அழுத்திக்கொண்ட கிளுகிளுப்பான இடுப்பா இது? அவனை சீண்டிச் சிரித்த விழிகளா இவை?
அவனை வேண்டாமென்று உதறிவிட்டுப்போன பழைய காதலியை ஆறு வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு சூழலிலா திலகன் சந்திக்க வேண்டும்?
உணர்வுகள் கொந்தளிக்கும் சம்பவங்கள் நிறைந்த வித்தியாசமான காதல் கதை..