book

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று...

Nenjukkulae Innarendru..

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

"என்ன அருள் இது ?" என்று ரஞ்சனி பார்வையைச் செலுத்திய நேரம், அருகில் ஆரத்தித் தட்டுடன் வந்த அர்ச்சகரும் அவனை வித்தியாசமாய் பார்த்தார். "உங்க சாமியை எப்படிக் கும்பிடுவது என்று சொல் லிக் கொடு, சரியா செய்கிறேன்." "அதை இன்னும் நாலு வருஷம் கழித்துக் கேட்கணும். அரை மணி நேரத்துல நமக்குக் கல்யாணம், சம்பிர தாயங்களை கற்றுக் கொள்ள நல்ல நேரம் பார்த்தீங்க. பத்து நிமிஷம் பொறுங்க. சிவா வந்ததும், உங்களுக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்கிறேன். காதல் என்றால் காத தூரம் ஓடும் சிவாதான் இந்த மாதிரி அவசரமாய் வீட்டிற் குத் தெரியாமல் பதிவு கல்யாணம் செய்து கொள்ளத் துடிக்கும் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சரியான ஆள்" என்று நகர்ந்தாள் ரஞ்சனி. 'யார் இந்த சிவா? இவளை தான் பார்த்த இரண்டு மாசத்தில், அவனைப் பார்த்ததே இல்லையே?' என்று மனசுக்குள் கேள்வி குடைய அமைதியாய் பின் தொடர்ந் தான் அருள். இவளுக்கு வேண்டியவர்கள் யார்? உறவா? நட்பா ? இது கூடத் தெரியாமல், எந்த தைரியத்தில் இவளை மணம் புரிந்து கொள்ளத் தயாராய் இங்கே வந்து நிற்கிறாய்? என்று மூளை கேள்வி கேட்கும்போதே இதயம் விழித்து விட்டது.