book

எக்ஸைல்

Exile

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாரு நிவேதிதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :440
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184932041
Out of Stock
Add to Alert List

"சாருவை ஒருவர் ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது. 30 ஆண்டுகளில் தொடர்ந்து இலக்கியவாதியாக, கருத்தியலாளராக சாரு முன்வைக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் தீவிரமானவை. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மனச்சாட்சியின் குரலாக ஓர் எழுத்தாளன் தொடர்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவை. பொதுப்புத்தியில் உறைந்துகிடக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் குரலாக சாருவின் எழுத்து ஒலிக்கத் தொடங்கும்போதே அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதம் ஒன்று தொடங்கிவிடுகிறது. இது தமிழ் எழுத்துலகுக்கும் சமூகத்துக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் சாரு இலக்கியவாதிகளால் ஒரு கலகக்காரர். கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி. உலகளவில் நாவல் கட்டமைப்பு குறித்து நிகழ்ந்துவரும் மாற்றங்களை எப்போதுமே துல்லியமாக இனம் காணக்கூடியவர் சாரு. Autofiction என்னும் வகையில் உலக மொழிகளிலேயே ஒன்றிரண்டு பேர் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழில் இதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. அந்த வகையில் Autofiction நாவலான எக்ஸைல் உலக இலக்கியத்திலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. காலம், வெளி இரண்டிலும் முடிவற்ற சாத்தியத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்நாவல். வீரிய விருத்தி லேகியம் தயாரிப்பதிலிருந்து, வசிய மருந்தை விளக்குவது வரை, பணம் சம்பாதிப்பதிலிருந்து நவீன காலகட்டங்களின் பல்வேறு சங்கதிகள் வரை விரியும் இந்நாவலின் பின்சரடு மிக முக்கியமானது. நம் அகத்தோடு தொடர்பு உடையது. தமிழ் சித்தர் மரபையும் இந்திய ஞான மரபையும் சொல்லிச் செல்லும் பகுதிகள், இந்நாவல் தொட்டுச் செல்லும் உயரங்களில் முக்கியமானதும் உன்னதமானதுமாகும். இந்நாவலை இப்படித்தான் என்று வகைப்படுத்துவதைவிட, இந்நாவலே ஒரு புதிய வகைமாதிரியானது என்பதைத்தான் எக்ஸைல் முன்வைக்கிறது."