book

உரையாடல் கலை

Uraiyadal Kalai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :100
பதிப்பு :7
Published on :2008
ISBN :9788184024296
Out of Stock
Add to Alert List

ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதை தாண்டி, பலரின் முன்பாக எடுத்துரைப்பது பலருக்கும் ஒரு நடுக்கமான செயல்பாடாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிலரோ, அக்கலையில் இயல்பாகவே திறமையையும், ஆற்றலையும் கொண்டிருப்பர்.
உலகப் புகழ்பெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், பலரின் முன்பாக(மேடை உள்ளிட்டவை) பேச மிகவும் தடுமாறுபவர் என்று வரலாறு கூறுகிறது. அதேபோல், இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜ் என்பவருக்கும் இந்த விஷயத்தில் நடுக்கமே.இன்றைய பொருளாதார தாராளமய உலகில், எங்கு பார்த்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள். இன்றைய இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை தருபவை அந்த நிறுவனங்களே. அத்தகைய நிறுவனங்களில், Senior Executive, Team Leader, Team Manager, Project Manager, HR, Maintenance Manager, Store Manager, Purchase Manager and General Manager போன்ற பலவித பணி நிலைகளில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஒரு குழுவின் மூத்த உறுப்பினர் என்ற நிலையிலிருந்து பொது மேலாளர் என்ற நிலை வரை உள்ள பலரும், தமக்கு கீழுள்ள பணியாளர்களின் மத்தியில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்தப் பயிற்சி பலருக்கும் கட்டாயம் தேவைப்படும் ஒரு அம்சமாகிறது