book

மறைந்திருக்கும் உண்மைகள்

Marainthirukkum Unmaigal

₹218.5₹230 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :247
பதிப்பு :9
Published on :2010
ISBN :9788184021059
Out of Stock
Add to Alert List

பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்திச் சூழலைக் கெடுப்பதுதான். சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் கலாச்சாரம் தகர்ந்து போகும். இன்றைய மக்களுக்குக் கோயில்களின் மதிப்புத் தெரியவில்லை. பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மொழியும், தர்க்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.- அதனால் அறிவு வளர்கிறதே தவிர, இதயம் மூடித்தான் கிடக்கிறது. உயிர்த்துடிப்புள்ள கோயிலின் மகிமை இன்றைய மனிதருக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தமும் புரியவில்லை. இதனால், நமது கோயில்கள் மெல்ல மெல்ல தம் முக்கியத்துவத்தை இழந்து விட்டன. கோயில்கள் மீண்டும் உயிர்த்துடிப்பு பெறாதவரை இந்தியா இந்தியாவாக இராது. இந்தியாவின் இரசவாதம் முழுவதும் கோயில்களில்தான் இருக்கின்றன. இந்தியா எல்லாவற்றையும் கோயில்களிருந்தே பெற்றது. ஒரு காலத்தில், மனிதனுடைய வாழ்வில் நிகழ்வன எல்லாமே, கோயிலோடு தொடர்பு கொண்டதாக அம‌ைந்திருந்தது. அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்குத்தான் போவான். மனதில் கவலை ஏற்பட்டால் கோயிலுக்குச் செல்வான். மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நன்றி தெரிவிக்க கோயிலுக்குத்தான் ஓடுவான். குடும்பத்தில் எதாவது நல்ல காரியம் என்றால் மலர்களும் பழங்களும் ஏந்தி அவன் கோயிலுக்குத்தான் செல்வான். வாழ்வில் சிக்கல் ஏற்பட்டாலும் கோயில்தான் புகலிடம். இந்தியனுக்குக் கோயில்தான் எல்லாம். அவனது எல்லா ஆசா பாசங்களும் கோயிலைச் சுற்றியே செயல்பட்டன. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தனது கோயிலைத் தங்கமும் வெள்ளியும் நகைகளும் கொண்டு அலங்கரித்தான்