book

இலக்கியமும் பண்பாடும் (old book - rare)

Ilakiyamum Panpaadum

₹16+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.இ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :108
பதிப்பு :3
Published on :1994
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
Out of Stock
Add to Alert List

தமிழ் இலக்கியமும் பண்பாடும் காலந்தோறும் வளர்ந்து வந்திருப்பதையும் சமயமும் புலவர்களும பாவலர்களும் புரவலர்களும் இந்த வளர்ச்சிக்குத் துணையாகச் செயல்பட்டிருப்பதையும் இந்நூல் தெரிவிக்கிறது. இலக்கிய ஆதாரங்கள், செய்திகள் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி, நம் முன்னோர்களின் செல்வச் சிறப்பையும் பண்பாட்டு நலன்களையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். தமிழர் வாழ்வின் நெறியும் அறநெறியும் இந்நூலில் சுடர் விடுகின்றன. ஆசிரியரின் இலக்கிய ஆராய்ச்சிக்கு தமிழகத்தின் நெடிய வரலாறு கருப்பொருளாக அமைகிறது. காலம்மாறினாலும், பண்பாடு மாறாமல் செழுமை அடைந்திருப்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக சொல்கிறார். தமிழ் இலக்கியத்தின் உயர்வை, அதன் பல்வேறு கூறுகளை வகைப்படுத்தியும் வரலாற்றுக் கோர்வைக்கு ஏற்பவும் சொற் சித்தரங்களாக வரைந்திருக்கிறார். இந்நூலை படித்து முடித்ததும், 'நாம் மிகச் சிறந்த இலக்கியச் செல்வத்திற்குச் சொந்தக்காரர்கள். புகழ் மிகுப்பாட்டுப் பாரம்பரியத்துக்கு வாரிசுகள்' என்ற பெருமிதம் தோன்றுகிறது. புறநானூறு, திருக்குறள், தமிழ்க்காப்பியங்கள், தொல்காப்பிம், இலக்கிய ஆய்வாளர்களின் நூல்கள், நாட்குறிப்புள், தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கல்வி நிலைய வெளியீடு, மகாத்மா காந்தி நூல்கள் ஆகிய பல்வேறு காலத்திற்குரிய நூல்களிலும் கருத்துக்கு உரமும் வலிமையும் ஏற்றுகிறார்.